Polimer News
விளையாட்டு

பிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் ஸீவா தோனி

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் மகள், அந்த அணி வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில், தோனியின் மகள் ஸீவா தோனி அழகிய நடனமாடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் ஐபிஎல் போட்டி நடந்தபோது, கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்தபின் மைதானத்துக்கு வெளியே வீரர் டெயின் பிராவோவுடன் உரையாடிக்கொண்டிருந்த ஸீவா தோனி, தொப்பியை எவ்வாறு அணிய வேண்டுமென அவருக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இந்த அழகிய காட்சியை பதிவுசெய்த தோனி ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related posts

Polimer News