Polimer News
உலகம்

இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியது

பிரேசில் நாட்டில் இரு டிரக்குகளுக்கு நடுவே அப்பளம் போல நொறுங்கிய காரில் சிக்கிய இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.

பெலோ ஹோரிசோன்ட் ((Belo Horizonte)) என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு டிரக்கும் காரின் பின்பக்கம் மோதியதில் கார் இரண்டாக மடிந்து அப்பளம் போல நொறுங்கியது.

விபத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதில் சிக்கியிருந்தவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறு சிறு காயங்களுடன் இருந்த அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.

Related posts

Polimer News