Polimer News
தமிழ்நாடு

வேலூர் அருகே அதிகாரிகளை கண்டதும் பணப்பையை வீசி விட்டு ஓட்டம்

தேர்தல் அதிகாரிகள் சோதனையின் போது பணத்தை வீசி விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த இருவர் அதிகாரிகளைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு தப்பி ஓடினர். அந்தப் பையை பார்த்த போது உள்ளே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இதே போன்று மதுரை அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல், ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் இருந்த பையை சாலையில் வீசி விட்டு தப்பியது. அதை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Polimer News