Polimer News
விளையாட்டு

உலகக்கோப்பைகான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது.

இதில் விளையாடும் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் உஸ்மான் காவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஃகிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் கேரே, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜியெ ரிட்சர்டுசன், நாதன் கோல்டர் நெய்ல், ஜேசன் பேஹ்ரெண்டார்ப் ((jason behrendorff)), நாதன் லியான், மற்றும் ஆடம் ஸம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

Polimer News