Polimer News
கல்வி

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

தமிழகத்தில் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், 518 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் நான்கு லட்சத்து 40 ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன.

வழக்கமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்நிலையில், அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

Related posts

Polimer News