சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்க சென்ற திமுக பெண் தொண்டர் ஒருவர், எதிர் கேள்வி எழுப்பிய இளைஞர் ஒருவரிடம் உரிய பதில் அளிக்க இயலாமல் இடத்தை காலி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஒரு கோடி கையெழுத்து பெறும் முயற்சியில் இறங்கினர்.
சென்னையில் சில திமுக பெண் தொண்டர்கள் கையெழுத்து பெறும் ஆவணத்துடன் வலம் வந்தனர். இவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? அதனால் பாதிப்பு என்ன? என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. சாலையில் போவோர் வருவோரையெல்லாம் அழைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது விபரம் தெரிந்த இளைஞர் ஒருவரை அழைத்து கையெழுத்து கேட்க, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல்,பெண் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இளைஞருக்கு பதில் சொல்ல சதீஷ் என்பவரை துணைக்கு அழைத்தனர். அவருக்கும் விபரம் தெரியாததால், கையெழுத்து பெற முயன்றவர்கள் பதில் சொல்ல இயலாமல் அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.
இதே போல நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்ற முருக பக்தர்களுக்கு இலவச உணவு பொட்டலம் கொடுத்து கையெழுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது.
ஒரு திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு உள்ளது என்று கருதுவோர், அது தொடர்பாக விரிவான புரிதல் இல்லாத நபர்களை அனுப்பி கையெழுத்து வாங்க முயன்றால் இதுபோன்ற சவால்களை சம்பந்தபட்டவர்கள் எதிர் கொள்ள வேண்டி வரும்..! என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி..!