நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமது காலணியை பழங்குடியின மாணவரை கொண்டு கழற்றச் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள தெப்பக் காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளர்ப்பு யானைகளுக்கான நல்வாழ்வு மற்றும் புத்துணர்வு முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மாணவரை கொண்டு காலனியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்றவும், மாட்டவும் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு பழங்குடியினர் நலசங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மாணவனை காலணியை கழற்ற சொன்ன வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டதால், தனது செயலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரனாக கருதியே மாணவனை அழைத்து காலணியை கழற்ற கூறியதாகவும், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.