கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், ஹாங்காங் நகரிலிருந்தும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக, தமிழ்நாட்டிற்குள் வரும், விமானப் பயணிகள், தனியாக அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய, மாநில சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினரால், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சீனாவிற்கு சென்று திரும்பிய ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு குறித்து ஐயத்தால் அனுமதிக்கப்பட்ட 8 சீனர்களும், 2 தமிழ்நாட்டுப் பெண்களும், வைரஸ் தாக்குதல் இல்லை என உறுதியானதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.