திருப்பூரில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர், வீணாகும் குடிநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்- அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.