சென்னை பெசன்ட் நகரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். நேற்று நள்ளிரவில் கடற்கரை சர்வீஸ் சாலையில் காவல்துறையினர் அனுமதியின்மையை மீறி சில இளைஞர் அதிக ஒலி எழுப்பும் இருசக்கர வாகங்களில் சாகசங்களில் ஈடுபட்டனர்.
இவ்வாறு பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
கீழே விழுந்த அந்த இளைஞரை தூக்கிவிட எவரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த இளைஞர் தானே எழுந்து சென்றார்.