செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 26-ம் தேதி சுங்கச்சாவடியில் நடைபெற்ற தகராறில், அலுவலகத்தின் லாக்கரில் வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுங்கச்சாவடி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகாரளித்தது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பூபதிராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.