சென்னையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் யோசனையை தெரிவித்தது முதலமைச்சர்தான் என்று காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கிண்டி கத்திபாரா முதல் போரூர் வரை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 121 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 8 கேமராக்கள், வாகனங்களின் பதிவு எண்களையும் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் கொண்டவையாகும்.
இந்த 121 சிசிடிவி கேமராக்களையும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்து பேசிய ஏ.கே. விஸ்வநாதன், உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற காவல்துறை அனைத்து முயற்சியையும் எடுக்கும் என்றார்.