சீனாவிலிருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த இருவர் என 8 பேர் சீனாவில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து சென்னை வந்தனர்.
அவர்களை தீவிரமாகப் பரிசோதித்து, பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுள்ளது.