சென்னையில் இருசக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து செல்லவில்லை என வாகன ஓட்டிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவா என்பவர், கடந்த 2018ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் ஒன்றை புதிதாக வாங்கினார். இதற்கான மாத தவணை நிறைவடைந்த நிலையில், என். ஓ. சி சான்றிதழ் பெறுவதற்காக தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருசக்கர வாகனத்தின் மீது 100 ரூபாய் அபராத தொகை நிலுவையில் இருப்பதாகவும், கடந்த 17ஆம் தேதி கொடுங்கையூரில் சீட் பெல்ட் அணிந்து செல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழப்பம் அடைந்த சிவா வேறு வழியின்றி நூறு ரூபாய் அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் கட்டிவிட்டு என். ஓ. சி சான்றிதழை பெற்றுச் சென்றார்.