சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி நடப்பாண்டில் முதன்முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நூறு சதவிகித மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த ஆண்டில் மட்டும் அந்த மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி 9 முறை முழுக்கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் அனுப்பப்படும் என்பதால் கோடை கால நீர் தேவையை எளிதில் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.