சென்னை லயோலா கல்லூரி விடுதியில் எம்பிஏ இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 22 வயதான பவன் சிங், லயோலா கல்லூரியில் எம்பிஏ இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவருடன் தங்கியிருந்த மாணவர்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில், நேற்றிரவு அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பவன் சிங்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.