ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மறுவிசாரணையைத் தொடங்கியுள்ள சிபிசிஐடி போலீசார், சென்னையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் 23 பேர் குற்றவாளிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை ராடிசன் புளூ நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் ஐஜி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் ஐபிஎல் சூதாட்ட வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.