முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43வது சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தகக் காட்சி வரும் 9 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறினார்.
சிறப்பு அம்சமாக 3 ஆயிரம் சதுர அடியில் கீழடி - ஈரடி என்ற மாதிரி கண்காட்சி அமைக்கப்படவுள்ளதாகவும் சிறந்த குறும்படங்கள் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் புத்தகக் கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக சண்முகம் குறிப்பிட்டார்.