ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மீன்வலையில் சிக்கி உயிருக்கு போராடிய விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.
நேருநகரில் மீன்வலைக் கொண்டு அமைக்கப்பட்ட வேலிக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டதால் அதன் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர், காயம்பட்ட பாம்பை மீட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு, பாதிக்கப்பட்ட பாம்பிற்கு 60க்கும் மேற்பட்ட பாம்புகளுக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் அசோகன் மூன்று மணி நேரம் சிகிச்சை அளித்து அதன் கழுத்து பகுதியில் தையல் போட்டு காப்பாற்றினார்.