தமிழ்நாட்டில் சந்து பொந்தெல்லாம் கட்சி நடத்தும் திமுகவையே 10 வருசம் நடுரோட்டில் நிற்க வைத்த மக்கள், கூட்டத்தை பார்த்து முதல்வர் கனவோடு அரசியலுக்கு வரும் புதிய நடிகர்களின் அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை அய்யப்பன் தாங்கலில் இல்லந்தோரும் இளைஞர் அணி என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் தாமோ. அன்பரசன்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன், தமிழ்நாட்டில் சந்து பொந்தெல்லாம் கட்சி நடத்தும் திமுகவையே 10 வருசம் நடுரோட்டில் நிற்க வைத்த மக்கள், கூட்டத்தை பார்த்து அரசியலுக்கு வந்த சீமான் மற்றும் வர இருக்கும் நடிகர்களின் அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்
சினிமாவில் இருந்து ஒருவர் முதல்வராவது எல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு போய்விட்டது. இது தெரியாமல் எதிர்காலத்தில் முதல்வராகும் கனவோடு இருக்கும் நடிகர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என்றால் நம் இயக்கத்தை வலுப்படுத்த புதிதாக இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்" என்றார்.
அதே நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வரானால் தனக்கு மகிழ்ச்சி என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.