சில கட்சிகள் கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து அல்ல கதவையே கழட்டி வைத்து காத்திருப்பதாகவும், எவரும் செல்லவில்லை என்று அதிமுகவை, திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்
சென்னை தண்டையார் பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, சொன்னதையும் செய்த.. சொல்லாததையும் செய்த திமுக ஆட்சியை ஏன் அகற்ற முடியவில்லை ? என்று உரையை தொடங்கியதால் அருகில் இருந்த ஆர்.எஸ்.பாரதி முறைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்
ஒரு வழியாக பாயிண்டுக்கு வந்த வீரமணி , சில கட்சிகள் கதவை திறந்து வைத்துக் கொண்டு கூட்டணிக்காக காத்திருப்பதாகவும், இன்னும் சிலர் கதவையே கழட்டி வைத்துக் கொண்டு காத்திருப்பதாகவும் அங்கு எவரும் செல்லவில்லை என்று அதிமுகவை கிண்டலடித்ததோடு, திமுகவுடன் கூட்டணிவைக்க கட்சிகள் வெயிட்டிங் லிஸ்டில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்
கலைஞருக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் என்று சொன்னார்கள் , இந்தியாவே தன்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கற்றிடம் என்று முதல்வர் காட்டியதால் தங்களிடம் கொள்கை கூட்டணி உள்ளதாக கூறிய வீரமணி மறைமுகமாக ரஜினியையும் சாடினார்