நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை வெள்ள மீட்பு பணிகளில் சிறப்பாக செயல் பட்ட மீனவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் படகோட்டி பட பாடலை முழுமையாக பாடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களை பாராட்டினார்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் சிறப்பாக செயல்பட்ட மீனவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.
டில்லியில் விரைவில் சில மாற்றங்கள் ஏற்படும் அப்பொழுது மீனவர்களின் கோரிக்கைகள் இன்னும் சிறப்பாக நிறைவேற்றப்படும் என்று கனிமொழி உறுதி அளித்தார்
மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , மேடையில் எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில் இடம் பெற்ற தரைமேல் பிறக்க வைத்தான்.. பாடலை ராகத்துடன் பாடத்தொடங்கினார்
ஸ்டார்ட்டிங்கில் ராகமும் தாளமும் தப்பி... கொஞ்சம் திக்கி திணறி சிரமமாக பாடினாலும்... அடுத்தடுத்த பாடல்வரிகளை இசைக்கேற்ப அசத்தலாக பாடி மீனவர்களின் கரகோஷத்தை பெற்றார் அமைச்சர்
அமைச்சரின் பாடலை கேட்டு கனிமொழி சிரித்தபடியே இருக்க , மற்றொரு அமைச்சரான கீதா ஜீவன் தலையசைத்து ரசித்தார்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடலை பாடி முடிக்கும் தருவாயில் மீனவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது