மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள், இயக்குனர்கள் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மக்கள் பிரச்சனைக்காக நாக்கை மடித்துக் கண்டு குரல் கொடுக்கும் தைரியக்காரர் விஜயகாந்த் என்று கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தினார்
கலைத்துறை தான் விஜயகாந்துக்கு முதல் குடும்பம் எனக் குறிப்பிட்டு கண்கலங்கினார் ராதாரவி
கிராமத்தில் இருந்து வந்த வெள்ளந்தி மனிதர் விஜயகாந்த் உள்ளிட்ட நாங்கள் எல்லாம் ராமெட்டீரியல் என்று வாகை சந்திரசேகர் தெரிவித்தார்
தமிழ் திரையுலகின் நிஜ சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் என்றார் கருணாஸ்
ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் எப்படி இருப்பான் என்பதை அறிந்து கொள்ள விஜயகாந்த் குறித்து பாடபுத்தகங்களில் பாடம் இடம் பெற வேண்டும் என ஜெயம் ரவி கோரிக்கை விடுத்தபோது விஜயகாந்த் மகன் கண்கலங்கினார்
நடிகர் சங்கம் கட்டுவதற்கு இனியும் கடன் வாங்காமல் கேப்டன் படபாணியில் மொய் விருந்து வைத்து நடிகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்று மன்சூரலிகான் கேட்டுக் கொண்டார்
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மக்களின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்று பயந்து போய் பல நடிகர்கள் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்
சின்னக்கவுண்டர் படத்தை இயக்குவதற்கு முன்பே தனது திருமணத்துக்கு விஜயகாந்த் செய்த உதவியை ஆர்.வி .உதயகுமார் நினைவு கூர்ந்தார்
விஜயகாந்த் தனக்கு உணவு அளித்த தாய் என்றார் எம்.எஸ்.பாஸ்கர்
விஜயகாந்திற்கு ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர்கள், ஓடுநராக இருந்தவர்களையும் நினைவேந்தலின் போது தயாரிப்பாளர் டி.சிவா நினைவு கூறினார்
விஜயகாந்தின் பெருமைகள் குறித்து எஸ்.வி.சேகர் பேசினார்.