எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் அகற்றும் பணிகளை மூன்று கட்டங்களாக பிரித்து மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் அகற்றும் பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு எண்ணெய் கலந்துள்ளது என்பது குறித்து ட்ரொன் உள்ளிட்ட கருவிகளின் உதவியுடன் ஐஐடி வல்லுநர் குழு கணக்கெடுத்து வருவதாகவும், அவர்களது ஆய்வறிக்கை, CPCL நிறுவனம் கொடுக்கும் அளவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்றும் கூறினார்.