சென்னை அடுத்த மீஞ்சூர் முதல் எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலை சீர்கெட்டு உயிர்பலிவாங்கும் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் உடனடியாக பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்
சென்னை அடுத்த மீஞ்சூர் முதல் எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக உருகுலைந்து காணப்படும் நிலையில் அதில் தேங்கிய மழை நீரில் தந்தையும் மகனும் இருசக்கர வாகனத்தில் வந்து விழும் காட்சிகள் செய்தியாக வெளியான நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் , பொன்னேரி சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யா, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்
தங்கள் வாகனங்களை விட்டு இறங்கி சாலையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வியப்புடன் பார்வையிட்டார். . இந்த சாலை பல வருடங்களாக இப்படித்தான் குண்டும் குழியுமாக உள்ளது. தரமற்ற முறையில் பேட்ஜ் ஒர்க் செய்யும் சாலைப்பணியால் ஒரு பயனும் இல்லை என்று மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்
பொதுமக்களின் கேள்விகளை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை இன்னும் எட்டு மாதங்களில் முழுமையாக சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்