மாரிமுத்துவின் உடலைக் கண்டு அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உதவி இயக்குநராக மாரிமுத்து பணியாற்றிய காலத்தில் இருந்து அவருடன் நடித்தவர்கள் வரை திரைப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மாரிமுத்துவுடன் திரைப்பட சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் அவரது உடலைக் கண்டதும் கதறி அழுது கண்ணீர் விட்டனர்.
மாரிமுத்துவுடன் நடித்த சின்னத்திரை நடிகர்கள் அவருடன் பழகிய தருணங்களை நினைவு கூர்ந்தனர்.
சின்னத்திரை சீரியலில் மாரிமுத்துவின் தம்பி மகளாக நடித்து வந்த தாராவை பள்ளியில் இருந்து பாதியிலேயே அழைத்து வந்திருந்தனர். சீருடையில் இருந்த அந்தச் சிறுமி மாரிமுத்துவின் உடலைக் கண்டு தேம்பித் தேம்பி அழுதார்
மாரிமுத்து நடித்த சீரியலின் ரசிகைகள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குரல், கம்பீரம் அனைத்தும் தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.