ஆன்லைனில் பணம் வைத்து விளையாடும் அனைத்து வகையான விளையாட்டுக்களையும் ஆன்லைன் சூதாட்டம் என்று அரசு தடை செய்துள்ள நிலையில், ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை, எனவும் அது game of skill என்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்..
சென்னையில் 22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்று பேசினார்.
சென்னை பெருநகர மாநகராட்சி உடன் இணைந்து பள்ளி மாணவர்களிடம் கிரிக்கெட்டுக்கான தேர்வு நடத்த உள்ளதாக தெரிவித்த அஸ்வின், இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்னையில் போதிய மைதான வசதி இல்லை இது குறித்து விளையாட்டுதுறை அமைச்சரிடம் அச்சம் இன்றி பேசுவேன் என்றார் அஸ்வின்
ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தடை செய்யபட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை என்று கூறிய அஸ்வின் சற்று கோபத்துடன்
மொபைல் போன் கையில் இருப்பதால்தான் சிறுவர்கள் மைதானத்திற்கு விளையாட வரவில்லை. அதனால் எல்லோரிடமும் மொபைல் ஃபோனை வாங்கி வைத்துவிட்டு மைதானத்திற்கு வர சொல்ல முடியுமா? என்றும், ஆன்லைன் கேம்லிங் என்று சொல்கிறீர்கள் அதில் எங்கே கேம்லிங் உள்ளது? என்றும் ஆவேசமானார்
சூதாட்டம் என்று லாட்டரி டிக்கெட் தடை செய்தது போல் இதுவும் தடை செய்ய பட்டு விட்டதா என செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி கேட்டார். ஆமாம் என்று செய்தியாளர்கள் பதில் கூறியதும் தடை செய்துவிட்டால் விளையாடாதீர்கள் என்றார் அஸ்வின்
அதே நேரத்தில் கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை எனவும் அது game of skill என்று தான் கூறுகின்றனர் எனக்கூறி ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டுக்களுக்கு ஆதரவுக்குரல் எழுப்பினார்.
ஆன் லைன் ரம்மி சரத்குமார் போல, ஆன்லைனில் ட்ரீம் லெவன் என்ற கிரிக்கெட் சூதாட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளம்பர தூதராக உள்ளது குறிப்பிடத்தக்கது.