சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில், வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்த கார் ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநரான பாலு என்பவர், சுனாமி குடியிருப்பின் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார் ஓட்டுநரான தணிகை வேலுவுக்கும், பாலுவுக்கும் இடையே, வீட்டின் கீழே வாகனத்தை நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றும் மதுபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த தணிகை வேலு, தனது காரின் சக்கரத்தை கழற்றுவதற்காக வைத்திருந்த இரும்பு ஜாக்கி ராடை எடுத்து, பாலுவின் தலையில் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தணிகை வேலுவை போலீசார் கைது செய்தனர்.