சென்னை கடற்கரை சாலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக ஆபத்தான முறையில் சண்டைக் காட்சிகளை படம் பிடித்து இஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சாலையில், வாகன ஓட்டிகள் முன்பு நடுரோட்டில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த அந்த இளைஞரை போக்குவரத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிய ரீல்ஸ் இளைஞர்கள் லைக்குக்காக செய்துவிட்டதாகவும், இனி இதே போன்று செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டனர்.