சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலரிடம் இரு இளைஞர்கள் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கே.கேநகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.