மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் வகையிலான பயண அட்டை வழங்கும் திட்டம் டிசம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே அட்டை என்றத் திட்டத்தின் அடிப்படையில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ, புறநகர் ரயில்கள், நகரப் பேருந்தில் பயணிக்கவும், வாகன பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வகையிலான அட்டையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
இந்த அட்டை சென்னை மெட்ரோவிலும் அறிமுகமாக உள்ளதாகவும், இதுதொடர்பாக வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.