அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் 900 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக புகாரில், மலேசியாவைச் சேர்ந்த ஹிஜாவு என்ற நிறுவனத்தின் மீதும், அதன் நிறுவனர், அவரது மகன் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி, ஹிஜாவு குழுமம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஹிஜாவ் நிறுவன ஏஜெண்ட் நேருவை, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.