சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி மாணவர்கள் விடுதி சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் மொத்தம் 220 மாணவர்கள் உள்ள நிலையில், 90 மாணவர்களுக்கு ஒரு குளியலறையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
விடுதியில் வழங்கப்படும் உணவிலும் அவ்வப்போது புழு இருப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், விடுதியில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.