சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில் சைக்கிள் சாகசம் செய்யும் சிறுவர்களால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலம் பாஷ தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் பிரேக் சைக்கிளை முன்பக்கம் தூக்கி கொண்டு, எதிரே வரும் வாகனத்தை மோதுவதுபோல் ஓட்டுவதும், எகிறி குதித்து சைக்கிளை நிறுத்துவதும் போன்ற குரங்கு சாக சேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கடற்கரைக்கு வருபவர்கள் சிறிது அச்சத்துடனே சாலையை கடக்க வேண்டியுள்ளது.