ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையில், என்.ஐ.ஏ. சோதனை, பி.எப்.ஐ. அமைப்பு மீதான தடை, பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருதியும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில உளவு அமைப்புகள், 70 அறிக்கைகள் அளித்துள்ளதாகவும் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாற்று தேதியில் பேரணி நடத்த தயாராக உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அணிவகுப்புக்கு அனுமதி தர உத்தரவிட்ட நீதிபதி, மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசை எச்சரித்தார்.