செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரேசன் கார்டுக்கு ரூ 1000 வதந்தி.. யூடியூப்பருக்கு ஆப்படித்த போலீஸ்..!

Sep 10, 2022 09:25:53 PM

ரேசன் கார்டுக்கு 1000 ரூபாய் தருவதாக போலி செய்தியை பரப்பிய புதிய அறிவிப்புகள் என்ற பெயரிலான யூடியூப்பரை போலீசார கைது செய்துள்ளனர். அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக பிரபல சேனல்களின் டெம்ப்ளட்டுகளை திருடி பொய் செய்தி பரப்பிய எச்.சி.எல்  நிறுவன ஊழியர் கம்பி எண்ணும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ரேசன் கார்டுக்கு 1000 ரூபாய்...! ரேசன் கார்டுக்கு சிலிண்டர் இலவசம் ..! இப்படி பொய்யான தகவல்கள், செய்திகளாக புதிய அறிவிப்புகள் என்ற யூடியூப் சேனலில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. பிரபல செய்தி சேனல்களின் யூடியூப் டெம்ப்ளெட்டுகளை திருடி அதே போல பதிவிடுவதால் இந்த பொய் செய்தி பலரை சென்றடைந்தது.

தாம்பரம் 48 வது வார்டு கவுன்சிலர் கார்த்தி என்பவரும் இந்த செய்தியை பார்த்து விட்டு அருகில் உள்ள ரேசன் கடைக்கு என்று 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு ஏதும் வந்துள்ளதா ? என்று கேட்டுள்ளார் அப்படி ஒரு அறிவிப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து அந்த யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட பெரும்பாலான செய்திகள் பார்வையாளர்களை ஈர்க்க பதிவிடப்பட்ட போலியான அறிவிப்புகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மக்களை ஏமாற்றும் நோக்கிலும் அரசுக்கு கெட்ட பெயர் பெற்றுத்தரும் வகையிலும் போலியான தகவல்களை பரப்பி வரும் புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை மேற்கொள்ள சேலையூர் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனலில் பொய்யான செய்திகளை பதிவிட்டு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, நாகி ரெட்டி பாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற 22 வயது பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது.

சென்னையில் தங்கி எச்.சி.எல் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் ஜானார்த்தனன். யூடியூப் சேனல் தொடங்கி குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பிரபலமான செய்தி சேனல்களின்பிரேக்கிங் செய்தி டெம்ப்ளட்டுகளை திருடி அதில் உள்ள லோகோவை மறைத்து கவர்ச்சிகரமாக பொய்யான தலைப்பிட்டு வீடியோ பதிவேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து ஜானார்த்தனனை கைது செய்த போலீசார் , அவர் பதிவிட்ட போலி வீடியோக்களை கைப்பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement