சென்னை வேளச்சேரியில் குப்பைகளை அகற்றும் போது கீழே இருந்த புதைவட மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூய்மைப் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3ஆவது மெயின் ரோடு சந்திப்பில், குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளை ஒப்பந்த தூய்மை பணியாளர் சேகர் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சரியாக புதைக்கப்படாமல் இருந்த புதைவட மின் கம்பியை, கவனிக்காமல் சேகர் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.