மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்குவதில் தாமதமும் தடையும் கூடாது எனப் பள்ளிகளுக்குக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி இறுதி வகுப்பு முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மற்ற வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கும் பெற்றோர் மாற்றுச் சான்றிதழ் கோரினால் தடையின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.