அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற ஒன்பதாயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றியுள்ளதாகத் தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்குப் பணியமர்த்தியிருந்த இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற இயக்ககம் அழைத்துக் கொண்டது.
இதனால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடக்கக் கல்வி இயக்கம் மறுத்துள்ளது.