சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்றிய வழக்கில் சியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த 5551 கோடி ரூபாயை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் இந்தியாவிலேயே முழுவதும் செல்போன்களைத் தயாரித்து விற்ற நிலையில் ராயல்டி என்னும் பெயரில் சட்டவிரோதமாகப் பெருந்தொகையை அதன் தாய் நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை விசாரித்ததில் பணம் அனுப்பப்பட்ட மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் சியோமி இந்தியா நிறுவனம் எந்தப் பொருட்களையும் சேவையையும் பெறாதது தெரியவந்தது.
இதையடுத்துச் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் மதிப்புக்கு சியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த 5551 கோடியே 27 இலட்ச ரூபாயை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.