சென்னை பெசன்ட் நகரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பணிமனைக்குள் திரும்புவதை குறிக்கும் வகையில் சைகை காட்டாத நிலையில், வேகமாக வந்த இருசக்கர வாகனம் அரசுப் பேருந்து மீது மோதியதில், அதில் பயணித்த இளைஞர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அயப்பாக்கத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான ஜெகதீஷ், தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெசன்ட் நகர் பேருந்து பணிமனைக்கு அருகே வேகமாக வந்த அவர்கள், பணிமனைக்குள் செல்வதற்காக திரும்பிக் கொண்டிருந்த பேருந்தை கவனிக்காமல் அதன் மீது மோதினர்.
மோதிய வேகத்தில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின்பக்க சக்கத்தில் சிக்கிய ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மற்றொரு இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.
பைக்கில் வந்த இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததோடு வேகமாக வந்ததாதாக கூறப்படுகிறது. அதே நேரம், அரசுப் பேருந்து ஓட்டுநரும் பணிமனைக்குள் திரும்புவதை குறிக்கும் வகையில் சைகை காட்டாத நிலையில், அவரை கைது செய்த போலீசார், பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.