செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

300 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாவது பெண் மேயர்

Mar 04, 2022 07:42:00 AM

இந்தியாவின் மிக பழமையான சென்னை மாநகராட்சி உருவான வரலாறு குறித்தும் இதில் பெண்கள் பங்கு குறித்தும் விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு...

இன்றைய தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் பரபரப்பாக இயங்கி வந்த மிக பெரிய வர்த்தக மையம். நகரத்தின் வளர்ச்சி, வரி விதிப்பில் ஏற்பட்டு வந்த தகராறு உள்ளிட்டவற்றால் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையை அப்போதைய ஆளுநராக இருந்த ஜோசைய சைல்ட் புரிந்துகொண்டார்.

சென்னை நகரத்தின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைத்த அவர், சென்னைக்கென தனி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜேம்ஸ்-யிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து 1687 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மன்னர் இரண்டாம் ஜேம்ஸ், சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரசு பிரகடனம் செய்தார். இதுவே, ஐரோப்பா கண்டத்தை தாண்டி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட முதல் மாநகராட்சி.

ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் உடன் 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது சென்னை மாநகராட்சி.

அப்போது, புனித ஜார்ஜ் கோட்டை கவுன்சிலின் இரண்டாவது நிலையில் இருந்த நத்தேனியல் ஹிக்கின்சன், சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். முதல் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டைக்குள், தற்போது புனித மேரி தேவாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது மேயரின் பதவிக்காலம் ஒரு ஆண்டு.

தொடர்ந்து செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சியின் மன்றமும் மேயர் பதவியும் 1801 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஒழிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மன்றமும், தலைவர் பதவியும் உருவாக்கப்பட்டது.

அப்போது மன்றத்தில் 50 உறுப்பினர்கள் இருந்தனர். நீதிகட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி. தியாகராயர் மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரே முதல் இந்தியர்.

1933ஆம் ஆண்டின் நகர முனிசிபல் சட்டத்தின்படி, தலைவர் பதவியின் பெயர் மீண்டும் மேயர் என மாற்றப்பட்டது. மேயர் பதவிக்கான ஆடைகள், சின்னம், நடைமுறைகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. சென்னை மாகாண சட்டமன்றத்தின் தலைவரது நாற்காலியைப் போலவே மேயர் பதவிக்கான நாற்காலியும் செய்யப்பட்டது.

பழமையும், பெருமையும் ஒரு சேர கலந்து வரலாற்று அடையாளமாக திகழும் சென்னை மாநகராட்சியில் ஆண்களே அதிகம் அதிகாரத்தில் இருந்துள்ளனர். 1933 ல் ராஜா சர் முத்தையா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 48 மேயர்கள் சென்னை மாநகராட்சியை நிர்வகித்துள்ளனர்.

ஆனால் இதில் இரண்டு பெண்கள் மட்டுமே மேயராக இருந்துள்ளனர். முதல் முறையாக தாரா செரியன் 1957 - 1958 வரையும் 1971-1972 வரை காமாட்சி ஜெயராமனும் மேயராக இருந்துள்ளனர்.

தற்போது சென்னை மாநகராட்சி மேயர் பதவி, இடஒதுக்கீடு அடிப்படையில் பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு 49 வது மேயர் பதவியை மூன்றாவது முறையாக ஒரு பெண் அலங்கரிக்க இருக்கிறார். 200 வார்டு உறுப்பினர்களில் 102 உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்கள்.

வரலாற்று பழமை மிகுந்த சென்னை மாநகராட்சி மாமன்ற சபையை பெண்கள் பெரும்பான்மையாக நிர்வாகம் செய்கின்றனர்.


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement