தமிழகத்தில் பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த ஆண்டு 10,11,12ஆகிய மூன்று வகுப்புகளையும் சேர்த்து மொத்தமாக 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் எனவும், வினாத்தாள் கசிவதை தடுக்க, இரண்டு வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும், எந்த வினாத்தாள் கொடுப்பது என தேர்வு அன்று தான் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பு பொருத்தவரையில் பதினொன்றாம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் அதேபோல பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.