நள்ளிரவில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது தொடர்பாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஒருமணி அளவில் தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி பைக்கில் இரண்டு பேர் தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அலுவலகம் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெட்ரோல் குண்டுவீசியதாக வினோத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.