செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மிஸ் தமிழ்நாடு அழகியிடம் யூத்தாக நடித்து வாழ்க்கையை சீரழித்த 57 வயது எஸ்.எஸ்.ஐ..! பலாத்கார வழக்கில் சிக்கினார்.!

Feb 04, 2022 01:52:07 PM

சென்னை பள்ளிக்கரணையில், மிஸ் தமிழ்நாடு அழகிப் பட்டம் வென்ற பெண்ணிடம், இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மீது, அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நில மோசடி வழக்கில் உதவி செய்வதாக வீட்டிற்குள் நுழைந்தவர், சாத்தானை அகற்ற ஜெபம் செய்வதாகக் கூறி ஏமாற்றி அந்த பெண்ணுக்கு செய்த கொடுமைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கோவளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். சமூக ஆர்வலரான இவருக்குச் சொந்தமான இடத்தில் வீடுகட்டித் தருவதாக கூறி பில்டர் ஒருவர் ஏமாற்றியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற அந்த இளம்பெண்ணிடம், காவல்துறையில் எஸ்.ஐ ஆக பணிபுரிவதாகக்கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

வசதி படைத்த அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், இருவரும் நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்திருப்பதாகவும், அதனால் தான் தொடர்ந்து இழப்புகள் ஏற்படுவதாக கூறிய ஆண்ட்ரூஸ், அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என போதகர் ஒருவரையும் தனது தாய் மற்றும் சகோதரியை அங்கு அழைத்து வந்துள்ளார்.

அதுவரை அந்த பெண்ணின் வீட்டில் இருந்த பணியாட்கள் அனைவரையும் வேலையை விட்டு அனுப்பிவைத்து விட்டு அந்த இளம் பெண்ணை மிகவும் அக்கறையும் உடன் இருந்து கவனிப்பது போல நடித்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

சாத்தானை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை என்று கூறி அந்த வீட்டுக்குள்ளேயே அந்த பெண்ணை சிறை வைத்த ஆண்ட்ரூஸ், புனித நீர் என்று திரவம் ஒன்றை குடிக்க வைத்து அந்த பெண்ணை உடல் ரீதியாகவும் பலவீனமடைய செய்ததாக கூறப்படுகின்றது.

உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றுவது போல நடித்த ஆண்ட்ரூஸ் ஒரு கட்டத்தில் அந்தப்பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து ஆண்ட்ரூஸ் வீட்டில் உள்ளவர்களிடம் அந்தப்பெண் தெரிவித்த போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி சமாதானம் செய்துள்ளனர். அந்தப்பெண்ணோ ஆண்ட் ரூஸிற்கு வயது அதிகமாக இருக்கும் போல என்று கேட்க இல்லை 42 வயது தான் ஆகிறது அதிக நேரம் வெயிலில் டியூட்டி பார்ப்பதால் அப்படி தெரிகின்றது என்று கூறி சமாளித்துள்ளனர்.

அந்த பெண்ணிடம் இருந்து சொத்துப் பத்திரங்கள், நகைகள் போன்றவற்றையும், வங்கி கணக்கில் இருந்து பணத்தையும் ஒவ்வொன்றாக சாமர்த்தியமாக கைப்பற்றிக் கொண்ட ஆண்ட்ரூஸ், அந்த பெண்ணுக்கு சொந்தமான வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு , வாடகை வீடு ஒன்றை பார்த்து அந்த பெண்ணை தங்க வைத்துள்ளார்.

அப்போது அவருக்கு ஆண்ட்ரூஸின் ஆதார் கார்டு கிடைத்துள்ளது. அதில் ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதும் உண்மையிலேயே அவருக்கு 56 வயது என்பதும் தெரியவந்ததால் அந்தப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரித்த போது அவர் உதவி ஆய்வாளர் அல்ல என்றும் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் என்பதும் தெரியவந்தது.

சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அவர் உதவிசெய்வது போலவும் இளமையாக இருப்பது போல விக் மற்றும் டை அடித்துக் கொண்டு தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்ததால் அவருடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து கூட்டாளி சுந்தர் என்பவருடன் சேர்ந்து அந்த பெண்ணை கடுமையாக துன்புறுத்தி விட்டு ஆண்ட்ரூஸ் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி வந்த ஆண்ட்ரூஸ், சுந்தர் மற்றும் ஆண்ட்ரூஸின் தாய் மற்றும் சகோதரி மீது பலாத்காரம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூஸ் தனது வழக்கறிஞர்களுடன் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு வந்த நிலையில் அங்கிருந்த போலீசார் ஆண்ட்ரூஸை கைது செய்யாமல் தப்ப விட்டதாகக் கூறப்படுகின்றது

முன் ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கி உள்ள ஆண்ட்ரூஸ் தனக்கு சில ரவுடிகளின் ஆதரவு இருப்பதாக கூறி காவல் நிலைய புகாரை வாபஸ் பெறும்படி அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் நன்கு படித்ததோடு, மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்ற அழகி ஒருவர் தன்னுடன் பழகுபவர் 56 வயதுக்காரர் என்பதை கூட அறியாமல் பிளாக் மேஜிக்கிற்கு மயங்கி வாழ்க்கையையே பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement