சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 96 ஆம் ஆண்டு படித்த மாணவ- மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1996 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்து பிரிந்து சென்ற மாணவ மாணவிகள் 60 பேர் 25 வருடம் கழித்து மீண்டும் குடும்பமாக சந்தித்துக் கொண்ட நிகழ்வு தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இதில் 60 மாணவ மாணவியர் தங்கள் மனைவி, கணவர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று பள்ளிகால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.பழைய மாணவியருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கேட்வாக் நடத்தி உற்சாகப்படுத்தினர்.
தங்கள் பள்ளி நாட்களை நினைவு கூறும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியதோடு, குழந்தைகளை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.நேரில் பங்கு கொள்ள இயலாதவர்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகளோடு, பூச்செடி ஒன்றும் வழங்கப்பட்டது. வழக்கமாக பள்ளி நாட்களை நினைவு கூறும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அந்தந்த பள்ளியில் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த நிகழ்ச்சில் பங்கேற்ற பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் தொழில் அதிபர்களாகவும், அரசு மற்றும் தனியார் துறையில் உயர் அதிகாரிகளாகவும் உள்ளதால் நட்சத்திர ஓட்டலில் நடத்தியது குறிப்பிடதக்கது.