சென்னையில் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அதிகாலை 3 மணியளவில், பாடிகுப்பம் நெடுஞ்சாலை தடுப்பில் 15 ஒப்பந்த பணியாளர்கள் வண்ணம் தீட்டி கொண்டிருந்தனர்.
எதிர்திசையில் அதிவேகமாக வந்த ஹுண்டாய் கார், ஒப்பந்த தொழிலாளர்களின் டாடா ஏஸ் வாகனம் மீது மோதியது. டாடா ஏஸின் முன்புறம் நின்று டீ குடித்து கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் சுஜீத்தை போலீசார் கைது செய்தனர். அவர் தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி காரில் அதிவேகமாகச் சென்றதாகத் தெரிவித்த போலீசார் அவர் மது அருந்தவில்லை என்றனர்.