செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.10 லட்சத்தை விழுங்கிய தலைமைச் செயலக கருப்பு ஆடு சிக்கியது..! வேலை தேடுவோரே உஷார்..!

Sep 22, 2021 09:35:25 AM

மின்வாரிய செயற்பொறியாளராக அரசு பணி பெற்றுத் தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுக்காமல், அதில் 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், ஏமாற்றம் அடைந்த என்ஜீனியரிங் பட்டதாரி தீக்குளித்த சம்பவத்தில் தலைமை செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அரசு வேலை தேடும் பட்டதாரிகளை குறிவைத்து தலைமைச்செயலகத்தில் வலம் வந்த மோசடி இடைத்தரகர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடந்த 10-ம்தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி இளைஞர், இடைத்தரகர் பழனிக்குமார் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பாலகிருஷ்ணனிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பழனிக்குமார் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக நீண்ட நாட்களாக நடையாய் நடந்ததன் பலனாக 13 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மீதம் உள்ள 10 லட்சம் ரூபாயை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால், பழனிக்குமார் வீட்டு முன் பாலகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து வேலையில்லா பட்டதாரி இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து இடைத்தரகர் பழனிகுமாரை கைது செய்து சூளைமேடு போலீசார் சிறையில் அடைத்தனர். பழனிக்குமார் மீது பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக பழனிக்குமாரிடம் நடத்திய விசாரணையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக, தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தலைமை செயலகத்தில் இடைத்தரகராக சுற்றிவந்ததாகவும், அவர் மூலமாக தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்ததாக தெரிவித்தார்.

அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் தேனியை சேர்ந்த இடைத்தரகர் செல்வக்குமாரையும், தலைமைச்செயலக ஊழியர் பரமசிவத்தையும் பண மோசடி வழக்கில் சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை போல ஏராளமான நபர்கள் தலைமை செயலகத்தில் தனக்கு இவரை தெரியும், அந்த வேலையை அவர் முடித்துக் கொடுத்து விடுவார் என கூறிக் கொண்டு, கடந்த காலங்களில் வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து வேலைவாங்கி தருவதாக ஏராளமான இடைத்தரகர்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது.

அத்தகைய கும்பலின் பண மோசடியால் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்று மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் உணர்ச்சி வசப்பட்டு விபரீத முடிவை தேடிக் கொள்ளாமல், மோசடியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உயர் காவல் அதிகாரிகளையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடினால் இழந்த பணத்தை திரும்ப பெறவாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் வேலைவாங்கி தருவதாக யாராவது இடைத்தரகர்கள் பணம் கேட்டால் உஷாராக இருக்க வேண்டும் என்றும், இந்த மோசடி கும்பல் பணத்துடன் மாயமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

Advertisement
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!
சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Advertisement