வரும் ஆகஸ்ட்15-ல், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தன்று ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) தெரிவித்துள்ளார்.
வீட்டில் சார்ஜ் செய்தால் ஐந்தரை மணி நேரத்திலும், சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரத்திலும் முழு சார்ஜ் நிலையை அடையும் இந்த ஸ்கூட்டர், அதன் மூலம் 100 முதல் 150 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 400 நகரங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிரத்யேக சார்ஜிங் மையங்களை அமைத்து வருகிறது. அறிமுக நிகழ்ச்சியில் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.