ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்லமாட்டார்கள் என கருத்துக் கூறியுள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு தான் விஜய் வழக்கு தொடர்ந்ததாகவும், இதில், விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் எனக் கூறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக சிலர் போலியான கருத்துருவாக்கம் செய்வதாக குறிப்பிட்டுள்ள சீமான், தனக்கான நீதியை பெற இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு எனவும், அந்த வகையில் நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தை நாடியது எந்த வகையிலும் தவறாகது எனவும் தெரிவித்துள்ளார்.